Friday, August 7, 2026
More

    Latest Posts

    சினிமா துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டாம் – கமல்ஹாசன்

    உத்தம வில்லன் பட விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமா துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என அழைக்கப்படுபவருமான மறைந்த டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய கமல்ஹாசன், சினிமா துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராமானுஜம் எனப் புகழாரம் சூட்டினார்.

    சினிமா துறையில் பல பிரச்னைகள், விவாதங்கள் எழுந்தாலும், ஒருவரையொருவர் அதிகமாக திட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

    உத்தம வில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸின் லிங்குசாமி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், திரைத்துரையில் ஒருவரை ஒருவர் வசைபாடக் கூடாது என கமல் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.