நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை என்றாலும் ‘பாஸ்’ என்கிற டைட்டிலை தேர்வு செய்து உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.
வரும் ஜனவரி 1 புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை அறிவிப்பதற்காக படக்குழுவினர் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்களாம்.
இந்த நிலையில் தான் நடிகர் விஜயகாந்தின் மறைவு திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் தனது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது சரியாக இருக்காது என விஜய்யும், தயாரிப்பு நிறுவனமும் நினைப்பதால் அநேகமாக பொங்கலுக்கு இது குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என தள்ளி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
