Friday, August 7, 2026
More

    Latest Posts

    எனக்கு ஓசிடி பாதிப்பிருக்கிறது: சலார் இயக்குநர் பிரசாந்த் நீல்!

    கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், “சலார் படமும் கேஜிஎஃப் படமும் வெவ்வேறானது. ஒரே மாதிரி கருப்பாக இருப்பதால் அப்படி நினைக்கலாம். எனக்கு ஓசிடி பாதிப்பு இருக்கிறது. அதனால் படத்தில் வருபவர்களுக்கு வண்ணமயமான ஆடைகள் யாரும் அணிந்தால்கூட பிடிக்காது. என்னுடைய குணாம்சம்தான் திரையில் பிரதிபலிக்கிறது. சலார் படத்தில் டிராமா இருக்கிறது. அது நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கும்” என்று கூறினார்.

    நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ஓசிடி பாதிப்பு இருப்பதாக அவரே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

    ஓசிடி என்றால் என்ன?

    ஓசிடி என்பது அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர் எனும் மனநோய். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் பல வகைகள் இருக்கின்றன. தூய்மை குறித்த பயம், வண்ணங்கள் குறித்த பயம், தொடர்சியான ஒரே செயல், சிந்தனை என பல வகைகளில் இருக்கிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.