குட் பேட் அக்லி படத்திற்கு அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் அஜித் ரூ.175 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ரூ.150 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அஜித் தற்போது ரூ.25 கோடி சம்பளத்தை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சினிமா மட்டுமின்றி கார் பந்தயங்களிலும் தீவிர ஆர்வம் கொண்ட அஜித் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த கார் பந்தய போட்டியில் பங்கேற்றார்.